அடேங்கப்பா… என்ன வாய்ஸ்… இளையராஜாவை IMITATE செய்த இயக்குநர் மிஷ்கின் : வைரலாகும் வேறலெவல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2022, 2:26 pm
Mysskin - Updatenews360
Quick Share

இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. அவருடைய பாடல் கேட்காமல் தூங்குபவர்களும் இருக்க முடியாது. அப்படி ஒரு இசைக்கலைஞர்தான் மேஸ்ட்ரோ இளையராஜா.

அவருடைய பாடலை பாடி இயக்குநர் மிஷ்கின் அசத்தியுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாருதி பிலிம்ஸ் ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ் .ஹரி சார்பில் டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மென்ட் ஞானசேகர் தயாரிக்கும் படம்தான் டெவில்.

இயக்குநர் ஆதித்யா இயக்கியுள்ள இந்த படத்துக்கு, முதன்முறையாக இசையமைக்கிறார் மிஷ்கின். டெவில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியான நிலையில் தற்போது இயக்குநர் மிஷ்கின், இளையராஜா இசையமைத்த துள்ளி எழுந்தது பாட்டு என்ற பாடலை பாடியுள்ளார்.

சற்று இளையராஜாவின் குரல் போலவே பாடி அசத்தியுள்ள மிஷ்கின் வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 381

0

0