விஜய் சொன்னதை எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோங்க…டைம் இல்ல….டைம் இல்ல: மழுப்பி நழுவிய எஸ்.ஏ.சி…!!

6 November 2020, 3:52 pm
vijay and his father - updatenews360
Quick Share

சென்னை: அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டு இருந்தது நேற்று பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்துள்ளார்.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டு இருந்த தகவல் நேற்று வெளியானது. நடிகர் விஜய் இந்த கட்சியை துவங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக தகவல் வெளியானது. ஆனால் அந்தக் கட்சியை பதிவு செய்தது, தான், தான் என்று விஜய் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்ஏ சந்திரசேகர் அறிவித்தார். அடுத்த திருப்பமாக, அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைந்து கொண்டு பணியாற்ற வேண்டாம் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டார்.

செய்தியாளர் சந்திப்பின் போது, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

கேள்வி: எனக்கு ஊடகங்கள் வாயிலாகத் தான், எனது தந்தை புதிதாக கட்சி துவங்கி இருந்தது தெரியவந்தது என்று விஜய் தெரிவித்துள்ளாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

எஸ்.ஏ.சி பதில்: 1993 ஆம் ஆண்டு முதல் ரசிகர் மன்றமாக துவங்கிய ஒரு அமைப்பு, நற்பணி மன்றமாக மாறி, மக்கள் இயக்கமாக மாறியது. அந்த மக்கள் இயக்கத்தின் தொண்டர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே கட்சியைப் பதிவு செய்துள்ளேன். இது விஜய் பெயரில் புதிதாக துவங்கப்பட்டது கிடையாது என பதில் அளித்துள்ளார்.

SAC - updatenews360

கேள்வி: இப்போது கட்சி துவங்க அவசியம் என்ன? யாருக்காக இந்த கட்சி?

எஸ்.ஏ.சி பதில்: நான் கட்சி துவங்குவதற்கான அவசியம் என்ன என்பது பற்றி இப்போது தெரிவிக்க முடியாது. தனித்தனியாக பேட்டி எடுக்க வாருங்கள் அப்போது சொல்கிறேன். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரமில்லை என்று தெரிவித்த எஸ்.ஏ.சி-யிடம் நேரமில்லையா, பதில் இல்லையா என்ற நிருபர்கள் கேள்விக்கு, ஏற இறங்க பார்த்துவிட்டு, நேரமில்லை என பதில் அளித்துள்ளார்.

கேள்வி: என்னுடைய ரசிகர்கள் யாரும் கட்சியில் சேர வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளாரே, இதை எப்படி புரிந்து கொள்வது?

எஸ்.ஏ.சி பதில்: இதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். நல்லதை நினைத்து ஆரம்பித்தேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர் பதிலளித்துள்ளார்.

என்ன நல்லது? யாருக்கு நல்லது? என நிருபர்கள் கேட்டதற்கு, எனக்கு இத்தனை மைக் முன்பாக பதில் கூறி பழக்கம் கிடையாது. தனித்தனியாக வேண்டுமானால் வாருங்கள் பதில் சொல்கிறேன் என்று கும்பிட்டு விட்டு கிளம்பிவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதற்கு முன்னதாக, எனக்கும் விஜய்க்குமான சுமுக உறவு பற்றிய சிலரின் கற்பனைக்கு எல்லாம் என்னால் பதில் தர முடியாது என தெரிவித்தார்.

Views: - 17

0

0