தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் : கருணைத்தொகையுடன் சேர்த்து 10% வழங்கப்படும் என அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2022, 7:45 pm
TN Bonus - Updatenews360
Quick Share

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 363

0

0