திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதி என்னென்ன? இன்று மாலை பேச்சுவார்த்தை.. விரும்பும் தொகுதி பட்டியல் வெளியீடு

8 March 2021, 2:01 pm
vaiko - meet - stalin - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றுள்ள மதிமுக விரும்பும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக, அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவை பொறுத்தவரையில், இந்திய முஸ்லீம் லீக் கட்சியுடனும், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஒப்பந்தத்தை மிக எளிதாக முடித்துக் கொண்டது.

ஆனால், வாங்கினால் இரட்டை இலக்கு தொகுதிகள்தான் எனக் கூறி பிடிவாதமாக இருந்த மதிமுக, திமுகவுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. ஆனால், இறுதியில் திமுகவின் வழிக்குத்தான் மதிமுகவும் சென்றது. திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை வைகோ பெற்றுக் கொண்டார். அதுமட்டுமில்லாமல், திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு விருப்பமான 10 தொகுதிகளின் பட்டியலையும் திமுக தலைமையிடம் வைகோ கொடுத்தார்.

இந்த நிலையில், தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக இன்று மாலை திமுக – மதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள்

ஆலங்குடி
கோவில்பட்டி
மதுராந்தகம்
சிவகங்கை
மதுரை மேற்கு
பாளையங்கோட்டை
ஈரோடு கிழக்கு
ஆவடி
விருதுநகர்
ராஜபாளையம்
சாத்தூர்

Views: - 26

0

0