திமுக – மார்க்சிஸ்ட் இடையே மீண்டும் இழுபறி : CPI-ஐ விட கூடுதல் இடங்களை பெற தீவிர முயற்சி..!!

6 March 2021, 12:04 pm
CPM - stalin - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய 2வது கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் இழுபறி நீடித்து வருகிறது.

ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மனித நேய மக்கள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (3), விடுதலை சிறுத்தைகள் (6), இந்திய கம்யூனிஸ்ட் (6) கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை ஒருவழியாக நடத்தி முடித்து விட்டது.

இன்னும் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை திமுக திமுக இன்று நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் போது, மார்க்சிஸ்ட் 13 இடங்களை கோரியதாகவும், ஆனால், திமுக 6 இடங்களை மட்டுமே தர ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை விட கூடுதல் இடங்களாவது பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் முயற்சித்து வருகிறது.

எனவே, 8 இடங்களை பெற முன்வந்தது. ஆனால், திமுக இதனை ஏற்க மறுத்து வந்துள்ளது. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது :- எங்களுக்கு தேவையான தொகுதிகளின் எண்ணிக்கையை திமுகவிடம் முன்வைத்துள்ளோம். ஆனால், அவர்கள் ஒதுக்கும் தொகுதியின் எண்ணிக்கையை அவர்கள் தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு போதுமானதாக இல்லை. இன்று எங்களின் செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் கலந்து பேசி முடிவு எடுப்போம், எனக் கூறினார்.

Views: - 9

0

0