ஆழ்வார் பிறந்த இடத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர்… வணிக வளாகம் கட்டும் பணி தீவிரம்… நடவடிக்கை எடுக்குமா இந்து அறநிலையத்துறை..?

Author: Babu Lakshmanan
21 October 2021, 11:44 am
thiruvallur dmk - updatenews360
Quick Share

திருவள்ளூர் : திருமழிசையாழ்வார் பிறந்த ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயன்ற திமுக பிரமுகரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில் உள்ள மடவிளாகம் பகுதியில் திருமழிசையாழ்வார் பிறந்த இடம் உள்ளது. இங்கு இந்து அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள திருமழிசை கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்கள், பொதுமக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த இடத்தை வாடகைக்கு எடுத்துள்ள நபர்களுக்கு, கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது.

இந்த நிலையில், திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தை, குத்தகைக்கு எடுத்துள் திமுக பிரமுகர் ஒருவர், சாலையோரமாக வணிக வளாகம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது, கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, திமுக பிரமுகர் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலத்தை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இது குறித்து திருமழிசை கோவில் நிர்வாக பொறுப்பு அதிகாரி நாராயணன் கூறுகையில், “இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் நிரந்தர கட்டடம் கட்ட அனுமதி கிடையாது. திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தில் கட்டடம் கட்டும் நபரிடம், நிரந்தர கட்டடம் எதுவும் கட்டக்கூடாது என எச்சரித்துள்ளோம். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” எனக் கூறினார்.

இதனிடையே, இது தொடர்பாக எதிர்கட்சியினர் கூறுகையில், “கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை பறிமுதல் செய்து அமைச்சர் சேகர் பாபு அதிரடி காட்டி வரும் நிலையில், அச்சமின்றி திமுக பிரமுகர் ஒருவர் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டியுள்ளார். கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அடிக்கடி அமைச்சர் கூறி வரும் நிலையில், இந்த உத்தரவு சொந்தக் கட்சியாக திமுகவினருக்கு பொருந்துமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது,” எனத் தெரிவித்துள்ளனர்.

Views: - 187

0

0