சுளுக்கு எடுக்க வேண்டியதிருக்கு : பத்திரிக்கையாளர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி…!!

15 May 2021, 1:00 pm
ravichandran - updatenews360
Quick Share

சென்னை : பத்திரிக்கையாளர்களுக்கு திமுக பிரமுகர் ஒருவர் வெளிப்படையாக மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த நிலையில், ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவை தலைதூக்கும் என்று அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதை நிரூபிக்கும் விதமாகவே, முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற மறுநாளே அம்மா உணவகம், அம்மா மருந்தகங்கள் மீது திமுகவினர் நடத்திய தாக்குதல் சம்பவங்கள் அமைந்துள்ளன.

இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலினும் இதில் தொடர்புடைய திமுகவினரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும், திமுகவினர் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கு திமுக நிர்வாகியான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வெளிப்படையாக மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், “நாங்கள் பொறுமையாக இருப்போம், ஆனால் பொறுமையாக இருக்கிறோம் என்பதற்காக நினைத்ததை எல்லாம் பேசினால்,” என்று கூறி விட்டு நாக்கை கத்தரித்து விடுவோம் என்பது போல் சைகை செய்தார்.

மேலும் “அதற்கு சுளுக்கு எடுக்க வேண்டியது தான். சுளுக்கு எடுக்கப்படும்” என்று அந்த சைகைக்கு விளக்கமும் அளித்துள்ளார். தொடர்ந்து, திமுக என்றால் வேறு மாதிரி எழுதும் மற்ற சிலருக்கு கையில் சுளுக்கு எடுக்க வேண்டியதிருப்பதாக அவர் பேசியிருப்பது பத்திரிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் கொத்து கொத்தாக ஏற்பட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு அவல நிலைகளை பத்திரிக்கையாளர்கள் வெளியுலகிற்கு கொண்டு வருவததை கண்டித்து திமுக நிர்வாகி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், கடந்த ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி குறித்து பொய் பிரச்சாரங்களை செய்த திமுகவினர், தற்போது உண்மை நிலவரங்களை எடுத்துரைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறி வருகின்றனர்.

Views: - 298

0

1