சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் : தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு நாளை விசாரணை!!

16 September 2020, 1:10 pm
Madras_High_Court_UpdateNews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவைக்கு தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் குட்கா பொருட்களை கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் குழு 2வது முறையாக அனுப்பப்பட்டது. ஆனால், இந்த மனுவை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது.