‘#விளம்பரபைத்தியம் ஸ்டாலின்’ : திமுகவினரின் விவசாய நாடகத்தை கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்..!

29 September 2020, 7:49 pm
dmk stalin photo shoot - updatenews360
Quick Share

தி.மு.க.வின் செயல் தலைவராக இருந்தது முதல் நிரந்தர தலைவர் பதவிக்கு வந்தது வரையில் அறிக்கை அரசியலை நடத்தி வந்தார். ஆனால், அவ்வப்போது, தேர்தலுக்காக நமக்கு நாமே பயணத்தையும் மேற்கொண்டு அட்டகாசம் செய்து வந்தார். அதாவது, சாலையில் சகஜமாக நடந்து செல்வது, பேருந்தில் ஏறி பயணிகளிடம் நலம் விசாரிப்பது, டீக்கடையில் அமர்ந்து சாதாரணமாக கலந்துரையாடுவது போன்ற செயல்களை செய்து வந்தார்.

இது எல்லாம் பெரிய அளவில் ஹிட் ஆகாத நிலையில், இவர் தெரியாமல் செய்த காரியம் பெரிய அளவில் பேசப்பட்டதுடன், கடும் விமர்சனத்திற்குள்ளாகியது.

அதாவது, வயல்வெளியில் அவர் நடந்து சென்று விவசாயிகளை சந்தித்தார். ஆனால், அது டிரெண்டாகவில்லை. அவரின் வருகைக்காக இரு தினங்களுக்கு முன்பே வயல்வெளிகளில் போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலைதான் மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியது. மக்களின் கவருவதற்காக போடப்பட்ட இந்த செட்டப்பில், மண்ட மேல இருந்த கொண்டைய மறந்து விட்டார் மு.க. ஸ்டாலின்.

இந்த விவகாரம் அவருக்கு மட்டும் பெருத்த அவமானமாக அமையவில்லை. ஸ்டாலினின் வாரிசின் செயலும் பெருத்த அவமானத்தை திமுகவிற்கு பெற்றுக் கொடுத்தது. அதாவது, குளங்களை தூர்வாருவதற்காகச் சென்ற உதயநிதியும், கண்மாய் வரையில் சிவப்பு கம்பளத்தைப் போட்டுச் சென்றுதான் தூர்வாரினார். இதுவும் பெரிதும் சர்ச்சைக்குள்ளானது.

ஆனால், தற்போது விவசாயி வாரிசாக அதிமுக தொண்டர்களால் பார்க்கப்பட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, போலி விவசாயி என்றும், நான்தான் உண்மையான விவசாயி எனக் கூறி வந்தார் ஸ்டாலின்.

இந்த நிலையில், அதனை நிரூபிப்பதற்காக வேளாண் மசோதாவுக்கு எதிரான போராட்டத்தை பயன்படுத்தி, கச்சிதமான போட்டோஷீட்டை நடத்தி முடித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் கான்கிரீட் போடாத விவசாய நிலத்தில் வெறும் கால்களில் நடந்து சென்று விவசாயிகளை சந்தித்து பேசினார். மேலும், முழுக்க, முழுக்க தனியார் டிவி ஷோக்களில் நடத்தப்படும் நிகழ்ச்சி போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ஏறி, காரசாரமாக பேசி விட்டு, மீண்டும் போட்டோஷூட்களுக்கு மத்தியில் காரில் ஏறிச் சென்றார்.

ஸ்டாலினின் இந்த போராட்டம் விவசாயிகளின் நலனைச் சார்ந்தது அல்ல என்றும், வெறும் விளம்பரத்திற்காகவே எனக் கூறி, ‘விளம்பர பைத்தியம் ஸ்டாலின், அரசியல் வேடதாரி ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

மேலும், அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றதால், திமுகவினரின் இந்தப் போராட்டம் செய்தித்தாள்களில் கூட கடைசி பக்கத்தில்தான் இடம்பெற்றது.

Views: - 13

0

0