திமுக அமைச்சர் காலில் விழுந்து ஆசி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன்.. ஈஸ்டர் திருவிழாவில் சுவாரஸ்யம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2024, 9:24 am
Dgl Seenivasan son
Quick Share

திமுக அமைச்சர் காலில் விழுந்து ஆசி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன்.. ஈஸ்டர் திருவிழாவில் சுவாரஸ்யம்!

திண்டுக்கல்லில் புகழ் பெற்ற 333 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாஸ்கு திருவிழாவானது நடைபெற்றது. ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி விழாவானது நேற்று நடைபெற்றது.

இந்த தேர் பவனி விழாவில் பங்கேற்க ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, ஐ.பி. செந்தில்குமார் எம்எல்ஏ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் திமுக கட்சி நிர்வாகிகள் ஆலயத்தில் காத்திருந்தனர்.

அப்போது அதே தேர் பவனி விழாவில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், எஸ் டி பி கட்சி வேட்பாளர் முகமது முபாரக் மற்றும் திண்டுக்கல் சீனிவாசனின் மகன்களான ராஜமோகன் மற்றும் இளைய மகன் சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.

அங்கு முன்னதாக காத்திருந்த ஐ. பெரியசாமி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் ஆகியோர்களுக்கும் மார்க்கியூஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் இரு கட்சியை சேர்ந்த அமைச்சர் பெருமக்களும் வேட்பாளர்களும் ஒருவருக்கொருவர் மரியாதை நிமித்தமாக கை கொடுத்து நலம் விசாரித்து கொண்டனர்.

பின்பு இருக்கையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் சீ.சீனிவாசன் தனது இளைய மகன் சதீஷை அழைத்து ஜ. பெரியசாமி அவர்களிடம் அறிமுகப்படுத்தினார் அவர் அறிமுகமாகி திரும்பிய பின்பு தனது மகன் சதீஷை ஜ. பெரியசாமி அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள் எனக் கூற சதீஷ் அமைச்சர் ஐ. பெரியசாமி கோவிலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் .

பின்பு அமர்ந்திருந்தர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக பேசிக் கொண்டு இருந்த பொழுது திடீரென்று திண்டுக்கல் சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் எங்கே ஏன் அவர்களுக்கு அழைப்பு விடுக்க வில்லையா என கேள்வி எழுப்பியவுடன். கூட்டத்தில் கூடியிருந்த திமுக, அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியும், பரபரப்பை ஏற்படுத்தியது .

பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஒவ்வொரு கட்சியினர் இடையே செய்த வாக்குறுதிகளையும் செய்யாத வாக்குறுதிகளையும் தேர்தல் பரப்புரையில் வார்த்தை யுத்தங்களாக கூறி தனது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்துக் கொண்டு வரும் நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற பாஸ்க்கு தேர் பவனி விழாவில் அதிமுக கழகப் பொருளாளர் சி சீனிவாசன் தனது மகனை திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி காலில் விழுந்து ஆசிர்வாதம் செய்த செயலும்.

திமுக, அதிமுக இரு கட்சிகளின் பிரதான எதிரியாக கருதப்படும் பாரதிய ஜனதாவை திண்டுக்கல் சி. சீனிவாசன் கேட்டறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 140

0

0