உதயநிதியின் மனைவி அரசியலுக்கு வருகிறாரா..? கிருத்திகாவின் பளீச் பதில்…!!

Author: Babu Lakshmanan
6 December 2021, 2:10 pm
udhay - krithiga - updatenews360
Quick Share

சென்னை : தமிழக அரசியலில் ஈடுபட எண்ணமா..? என்ற கேள்விக்கு உதயநிதியின் மனைவி கிருத்திகா பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவின் தலைவர் ஸ்டாலின், தனக்கு அடுத்தபடியாக கட்சியை நிர்வகிக்க தனது வாரிசு உதயநிதியை வளர்த்து வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பிறகும், அவர் சுறுசுறுப்பாக தொகுதியில் செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும், கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி, உதயநிதிக்கு பிறகு அவரது மகன் இன்பநிதியா..? என்றெல்லாம், திமுகவின் வாரிசு அரசியலை தற்போதும் எதிர்கட்சி தலைவர்கள், நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார். அப்போது, அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா..? என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த அவர், அரசியலுக்கு வரும் எண்ணம் துளிகூட இல்லை என்று பளீச்சென பதிலளித்துள்ளார்.

கிருத்திகா உதயநிதி தற்போது திரைப்பட இயக்குநராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 292

0

0