பஸ் கண்டக்டர்கள் மீது பாய்ச்சல்! துரைமுருகனுக்கு எதிராக கொந்தளித்த திமுகவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2021, 5:24 pm
Minister Duraimurugan -Updatenews360
Quick Share

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே கடந்த 5 மாதங்களாக, அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் என்ற வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன்.

பிடிஆரின் வளைகாப்பு காரணம்

லக்னோ நகரில் கடந்த மாதம் 17-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டபோதிலும் தமிழகத்தின் சார்பில் பிடிஆர் தியாகராஜன் பங்கேற்கவில்லை.

கொரோனா பரவல் காரணமாக அதற்கு முன்பு சுமார் 20 மாதங்கள் வரை காணொளி வாயிலாக மட்டுமே நடந்து வந்த மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், அப்போதுதான் நேரடியாக நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்காததற்கு, பிடிஆர் தியாகராஜன் கூறிய காரணங்கள் வேடிக்கையானவை.

Tamil Nadu government has no plans to revive lottery sales: PTR Palanivel  Thiagarajan- The New Indian Express

முதலில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் செல்ல முடியவில்லை என்று விளக்கம் அளித்தவர், பின்பு லக்னோ செல்வதற்கு இரண்டு மூன்று விமானங்கள் மாறி மாறிச் வேண்டும் என்று ஒரு காரணத்தைச் சொன்னார். பிறகு, நான் சிறிய விமானங்களில் பயணித்தது கிடையாது என்று கூறினார்.

பிடிஆருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

“ஒரு அமைச்சருக்கு நாட்டு மக்களின் நலனை விட வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுதான் பெரிதாக தெரிகிறதா?” என்று இதை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக கண்டித்தனர். சமூக வலைத்தளங்களிலும் இது கேலி பொருளாகிப் போனது. யாரோ அவருக்கு அட்வைஸ் செய்திருப்பார்கள் போலிருக்கிறது. அதன் பிறகு அதுபற்றி பிடிஆர் தியாகராஜன் அதிகமாக பேசுவதில்லை. ட்விட்டரிலும் யாருடனும் சண்டை போடுவதும் இல்லை.

தம்பி, பிடிஆர் கவனத்தில் கொள்.. தமிழக நிதி அமைச்சருக்கு எதிராக ஜெயக்குமார்  செய்த தரமான சம்பவம்.! | Ex minister Jayakumar's quality incident against  the Finance Minister of ...

பிடிஆருக்கு போட்டியாக துரைமுருகன்

அவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். சுமார் 60 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதால் என்னவோ, சில நேரங்களில் எல்லை மீறிப்பேசி அதற்காக கண்டனத்தை வாங்கிக் கொள்வது அவருடைய வாடிக்கை.

Duraimurugan flags high debt, falling growth - The Hindu

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமுவிடம் தட்டுத்தடுமாறி 700 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் அவர் வெற்றி வெற்றி பெற்றார். அவருடைய தேர்தல் அரசியல் வாழ்க்கையில் மிகக் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த தேர்தலில்தான்.

துரைமுருகனுக்கு குழி பறித்த திமுகவினர்

கட்சிக்காரர்கள் உள்ளடி வேலை நடத்தியதால்தான் தனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது என்ற கோபம் அவருக்கு வந்தது. இதனால் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக கூட்டங்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம், கூட இருந்தவர்களே குழி பறித்து விட்டார்கள், முதுகில் குத்திவிட்டார்கள் என்று துரைமுருகன் மனம் குமுறினார்.

I-T dept raids DMK treasurer Durai Murugan's Vellore residence

இதுவாவது உள்கட்சி விவகாரம் என்று பலர் விட்டுவிட்டனர். ஆனால் இரு தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடந்த
திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் துரைமுருகன் பேசியது, தமிழக அரசியலில் பெரும் சூறாவளியை ஏற்படுத்திவிட்டது.

எம்ஜிஆர் துரோகி

அவர் கூறும்போது,”கட்சிக்குத் துரோகம் செய்கிறவன் எவ்வளவுப் பெரிய ஆளாக இருந்தாலும், இந்த துரைமுருகன் நினைத்தால் 24 மணி நேரத்தில் கட்டம் கட்டிவிடுவான். எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன்பின் எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப்
பார்த்துள்ளோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். கட்டுப்பாடுடன் இருங்கள்” என்று கட்சி நிர்வாகிகளை எச்சரிக்க துரைமுருகன் கூறிய வார்த்தைகள் பூமராங் போல அவரையே திருப்பித் தாக்கி விட்டது.

durai murugan: எம்ஜிஆர் போன்ற துரோகிகளை இனியும் பார்த்துக் கொண்டிருக்க  முடியாது... துரைமுருகன் வார்னிங்! - dmk general secretary duraimurugan  called former chief minister mgr ...

எம்ஜிஆரை நம்பிக்கைத் துரோகி என்று குறிப்பிட்டதற்காக அதிமுக தலைமை அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. “அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதியை முதலமைச்சராக்கியதே எம்ஜிஆர்தான். ஆனால் அவரை துரைமுருகன் துரோகி என்கிறார்” என்று எம்ஜிஆருக்கு, கருணாநிதி செய்த துரோகங்களை ஒரு பெரிய பட்டியலே போட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் துணைத் தலைவர் பன்னீர்செல்வமும் அதிரடி காட்டினர்.

தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் வைகோவின் மதிமுக இதுபற்றி வாயே திறக்கவில்லை. துரைமுருகனை கண்டித்தால் தங்களது எதிர்கால அரசியல் வாழ்வு இன்னும் படு மோசமாகிவிடும் என்று கருதி அவர்கள் இதை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.

நடத்துநரை தாக்கி பேசிய துரைமுருகன்

இந்த நிலையில்தான் அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்துக்கு
உட்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசும்போது அரசு பஸ் கண்டக்டர்கள் பற்றி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியது, திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கப்பேரவை நிர்வாகிகளையே கொந்தளிக்க வைத்துவிட்டது.

சரி, அப்படி துரைமுருகன் என்னதான் பேசினார்?…

“பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்து பெண்கள் பயணம் செய்தால் பேருந்து கண்டக்டர் ஒரு மாதிரி பார்க்கிறார். பாவம் அவருக்கு கலெக்சன் குறித்து கவலை. பெண்கள் பேருந்தில் ஏறியதும் அப்படிப்போய் உட்கார் என்கிறார். அப்படிப்பட்டவர்களை பெண்கள் முறத்தால் அடிக்கவேண்டும்.
அரசு பேருந்து என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா?… எந்த கண்டக்டராவது பெண்களை தப்பா பேசினா என்கிட்ட சொல்லுங்க. அது யாராக இருந்தாலும் அவர்களை வேலையை விட்டு அனுப்பி விடுகிறேன்” என்று அவர் ஆவேசப்பட்டார்.

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதை துரைமுருகன் எதிர்ப்பேன் என்றாரா ? - You  Turn

அதாவது அரசு உள்ளூர் ஒயிட் போர்ட் பஸ்களில் இலவச பயணம் செய்யும் பெண்களை நடத்துனர்களே கேலி செய்வதாக கூறப்பட்டதை தொடர்ந்து அவர் இப்படி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார் என்கிறார்கள்.

Concessions for women to boost public transport' - DTNext.in

துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு

துரைமுருகனின் இந்த பேச்சைக் கண்டித்து தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்திலுள்ள அரசுப் போக்குவரத்து கழக நகரப் பணிமனையில், இன்று காலை 5 மணி முதல் டிரைவர்கள், கண்டக்டர்கள், பஸ்களை இயக்காமல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துரைமுருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்த தொ.மு.ச

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையினரும் துரைமுருகனுக்கு எதிராக கண்டன கோஷங்களை, எழுப்பியதுதான்.

“சொல்லாதே சொல்லாதே!… அரசு பஸ் கண்டக்டர்களை அடிக்கும்படி சொல்லாதே!”
“எடுக்காதே எடுக்காதே… சட்டத்தை கையில் எடுக்காதே!” என்று அவர்கள் முழக்கமிட்டது, அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்ததால் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடனடியாக பணிமனைக்கு சென்று அரசு பஸ் கண்டக்டர்கள், டிரைவர்களிடம் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடும்படி செய்தனர்.

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டம்

மேலும் இதுகுறித்து உடனடியாக அரசின் காதுகளுக்கு கொண்டு சென்று மாநிலத்தின் இதர பகுதிகளில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் குதிக்காதவாறு நிலைமையை கட்டுப்படுத்தியும் விட்டனர். “இல்லையென்றால் இந்த வேலை நிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவலாக நடந்திருக்கும்” என்று அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

பேருந்து பயணிகள் அவதி

எனினும் தஞ்சையில் நடந்த இந்த போராட்டத்தால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவர்கள், அலுவலகம் செல்வோர், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதுபற்றி போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அமைச்சர் துரைமுருகன் வாய்த்துடுக்கானவர். திமுக கூட்டங்களிலும் சரி, பொது இடங்களிலும் அவர் பேசும்போது அவன் இவன் என்று கூறுவார். அது அவர் வாய் தவறி வந்துவிடுகிறது என்று சொல்வதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் காட்பாடி ஒன்றியத்தில் அவர் பேசிய வார்த்தைகள் அப்படிப்பட்டவை அல்ல. கேலி பேசினால் அரசு பஸ் கண்டக்டர்களை முறத்தால் அடியுங்கள் என்று சொல்கிறார். அப்படியென்றால் இவரே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தண்டிக்க சொல்கிறார். இது பெண் பயணிகளை வன்முறைக்கு தூண்டிவிடும் செயல்போல உள்ளது. அரசு உள்ளூர் பஸ்களில் அமைதியாக இலவசப் பயணம் மேற்கொள்ளும் பெண்களைக் கூட அவருடைய பேச்சு அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு எதிராக திருப்பிவிட்டு விடும்.

அவருடைய முதுமையை காரணம் காட்டி இப்படி பேசிவிட்டார் என்று சிலர் கூறலாம். ஆனால் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏனென்றால் அவர் ஓரிரு வார்த்தைகளோடு இதை நிறுத்திக் கொள்ளவில்லை. அப்பிரச்சினை பற்றிய சில நிமிடங்கள் விரிவாகப் பேசி இருக்கிறார். அதுவும் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். இப்படி வரம்பு மீறி பேசுவது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. இதனால் திமுக அரசுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்” என்று குறிப்பிட்டனர்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தபோது சிறிய கட்சிகளின் தலைவர்களை துரைமுருகன் வாயா போயா என்று அழைத்த விஷயம், திமுக தலைவர் ஸ்டாலின் வரைக்கும் புகாராக சென்றது. ஆனால் அவர் தனது தவறை ஒருபோதும் திருத்திக் கொண்ட மாதிரி தெரியவில்லை. கூட்டங்களில் பேசும்போது துரைமுருகன் நகைச்சுவைக்காக கூறுவது அனைவரையும் கேலி செய்வதுபோல அமைந்துவிடும். இனிமேலும் அவர் இப்படி பேச மாட்டார் என்றெல்லாம் சொல்ல முடியாது. தற்போது திமுகவில் அவர்தான் மூத்த தலைவர். கருணாநிதிக்கும் மிகவும் நெருக்கமானவர். அதனால்தான் கட்சித் தலைமையால் துரைமுருகனை நேரடியாக கண்டிக்க முடியவில்லை. எனவே வழக்கம்போல் அவர் கிண்டலாகப் பேசி மற்றவர்களை காயப்படுத்தி கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்கிறார்.

திமுக அமைச்சர்களில் துரைமுருகன், பிடிஆர் தியாகராஜன் போன்றோர் தெரிந்தே இப்படி பேசுகிறார்களா? இல்லையா? என்பது புரியவில்லை. நிதியமைச்சர் இப்போதுதான் சற்று நிதானம் காட்டத் தொடங்கி இருக்கிறார். ஆனால் தற்போது துரை முருகன் சர்ச்சை நாயகனாக உருவெடுத்திருக்கிறார்.

Women can travel for free in 6,628 TN buses- The New Indian Express

திமுக தொழிற்சங்கத்தினரே அவருக்கு எதிராக திடீர் போராட்டத்தில் குதிக்கிறார்கள் என்றால்,
நாங்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல. எங்கள் தன்மானத்தை தொட்டுப் பார்க்காதீர்கள் என்றுதான் அர்த்தம். இதை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மற்ற அமைச்சர்களும் இவர்களின் பாணியை பின்பற்ற தொடங்கி விடுவார்கள்” என்று கவலை தெரிவித்தனர்.

Views: - 337

0

0