எங்க வரிப்பணத்தில் சனாதனத்துக்கு பிரச்சாரம் செய்யும் ஆளுநர்… உதயநிதி பேசியதில் என்ன தப்பு இருக்கு ; ஆர்எஸ் பாரதி தடாலடி..!!

Author: Babu Lakshmanan
6 September 2023, 6:04 pm
Quick Share

பாரத் என்று இந்தியாவின் பெயரை வைப்பதில் தவறில்லை, அரசியலமைப்புச் சட்டத்திலேயே அது உள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி குற்றம்சாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- உதயநிதி ஸ்டாலின் பேசியதில் தவறில்லை. சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசும்போது, அதனை எதிர்த்து தான் பேச முடியும். அதனை ஆதரித்து பேச முடியாது. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசுகின்றனர். எங்களது வரிப்பணத்தில் எங்களது மைக்கில் சனாதானத்தை பற்றி ஆளுநர் ஆர்எஸ் ரவி பிரச்சாரம் செய்யும் போது, நாட்டு மக்களுக்கு எதிர்த்து பேச உரிமை உண்டு. உதயநிதி பேசியதில் தவறில்லை.

ராமர் குறித்து தந்தை பெரியார் பேசிய போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 154 இடத்தில் வெற்றி பெற்றது காமராஜர் தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் திமுக வென்றது. இதை திமுகவில் அப்போது இடம்பெற்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் தந்தை நன்கு அறிவார். அரசியல் சட்டத்தில் பாரத் என்று உள்ளது. அதில் ஒன்றும் தப்பில்லை. இந்தியா என்ற கூட்டணியின் பெயரை வைத்த பின்னர் பாரத், என மாற்றுகின்றனர்.

இந்தியா என்ற பெயர் அரசியலமைப்புச் சட்டத்திலேயே பாரத் என்று இருந்த போதும் எதிர்க்கட்சிகள் சேர்ந்து இந்தியா என்று ஒரு கூட்டணியை வைத்த பின்பு மோடியும், பிஜேபி கூட்டணியும் பயந்து கொண்டிருக்கிறது என்பதை பாரத் என்ற பெயரை தற்போது வைக்க முயல்வதை காட்டுகிறது.

சனாதனம் என்பது நான்கு ஜாதிகளுக்கும், பிராமணர்களுக்கும், நான்கு பிரிவினர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை தான் சனாதனம். உள்ளூர் பிரச்சனைகளில் சனாதன பிரச்சனை பற்றி பேசக்கூடாது. தமிழ்நாட்டில் அதை காரணம் காட்டக்கூடாது. தமிழ்நாட்டில் ஒரு சமநிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம், என தெரிவித்தார்.

பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகம் பெண்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு நீண்ட வரிசையில் நின்றபடி வாங்கி சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் டிஜே. கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், எம்பி ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Views: - 273

0

0