நைட்டியோடு கோவிலுக்குள் சென்ற திமுக பெண் கவுன்சிலர்… பதறிப்போன அர்ச்சகர்… உடனே பணிநீக்கம் செய்து உத்தரவு..! (வீடியோ)

Author: Babu Lakshmanan
2 May 2022, 12:11 pm
Quick Share

சேலம்: திமுக பெண் கவுன்சிலர் கொடுத்த நெருக்கடியால் சேலத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள சீதா ராமசந்திர மூர்த்தி கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலின் அர்ச்சகராக பணிபுரிந்து வருபவர் கண்ணன் (32). இந்தக் கோவிலில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை திமுக கவுன்சிலர் மஞ்சுளா, நைட்டி அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். இதனை அர்ச்சகர் கண்ணன் கண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர் மஞ்சுளா, அர்ச்சகரை ஒருமையில் திட்டி பேசியுள்ளார். மேலும், அர்ச்சகருக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அர்ச்சகர் ஒரு வீடியோவை கடந்த மாதம் 27ம் தேதி வெளியிட்டுள்ளார். அதில், சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரின் 40-வது கோட்டத்தின் திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா கோவில் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுப்பதாவும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழுகாரணம் திமுக கவுன்சிலர் மஞ்சுளாதான் காரணம் எனவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதில், திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா அர்ச்சகரை, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஒருமையில் பேசும் காட்சிகள் உள்ளன. அருகில் இருந்த பெண்கள் அர்ச்சகருக்கு மரியாதை தருமாறு கூறியும் மஞ்சுளா, அர்ச்சகரை ஒருமையில் பேசி உள்ளார்.

இதனிடையே, கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் அர்ச்சகர் கண்ணன் தவறாக நடந்து கொண்டதாகவும், அதன் அடிப்படையில் கோவில் அர்ச்சகரை கண்டித்ததாகவும், திமுக கவுன்சிலர் மஞ்சுளா விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் திமுக கவுன்சிலருடன் மோதிய அர்ச்சகர் கண்ணன், சம்பவம் நடந்த தினத்தன்று மாலையே கோயிலிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு புது அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட அர்ச்சகர் கண்ணன் கூறுகையில், “திமுக கவுன்சிலரின் ஆதரவாளர்கள் கூறும் கருத்துக்களை மட்டுமே செயல் அலுவலர் கவனத்தில் எடுத்துக் கொண்டார். எந்த விசாரணையும் இன்றி நான் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்டேன்,” என தெரிவித்துள்ளார்.

Views: - 1223

0

0