கசாப் கடைக்கு விற்கப்பட்ட ஆடு… லாரியை பின்தொடர்ந்த நாயின் அன்பு… வைரல் வீடியோ!!

17 July 2021, 4:58 pm
dog - updatenews360
Quick Share

திருவாரூர் : தன்னுடன் வளர்ந்த ஆட்டை விட்டு பிரிய முடியாமல், நாய் ஒன்று லாரியை துரத்தி சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளைகுப்பம் பணங்குடி, ஆண்டிபந்தல் பகுதியில் கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் வளர்த்து வந்த ஆடுகளை கறிக்காக தரகரிடம் அப்பகுதியினர் விற்றதாக தெரிகிறது.

வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியான நாய் ஆட்டுடன் சேர்ந்து வளர்ந்து வந்த நிலையில், ஆட்டை கசாப் கடைக்காரர்கள் லாரியில் ஏற்றி சென்றனர். ஒன்றாக வளர்ந்த பாசத்தால் மனமுடைந்த நாய், தனது நண்பனான ஆட்டை பிரிய முடியாமல், லாரி போகும் வழியெல்லாம் கத்தி கொண்டு துரத்தி சென்றது.

லாரியை துரத்தி சென்ற நாயை பின்தொடர்ந்த வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மனிதர்களை காட்டிலும் நாய் நன்றியுள்ளது என்ற பொதுவான பேச்சு இருந்து வரும் நிலையில், அன்பிலும் விலங்கினமே உயர்வானது என்பதை இந்த வீடியோ காட்சிகள் உறுதிபடுத்தியுள்ளன.

Views: - 222

1

0