அண்ணாமலை பேச்சால் மாறும் கூட்டணி… எடப்பாடி பழனிசாமி போட்ட வியூகம் : கைக்கோர்க்க தயாராகும் சீமான்?!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2023, 9:04 am
admk NTK - Updatenews360
Quick Share

அண்ணாமலை பேச்சால் மாறும் கூட்டணி… எடப்பாடி பழனிசாமி போட்ட வியூகம் : கைக்கோர்க்க தயாராகும் சீமான்?!!

பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களுக்கு எதிராக பேசி வந்ததால், அதிமுகவின் முன்னாள் தலைவர்களை இகழ்ந்து பேசி வந்ததால் இந்த கூட்டணி முறிந்துள்ளது.

இந்த கூட்டணி முறிவில் வேறு சில முக்கிய விஷயங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. முதல் விஷயம் – அதிமுக – பாஜக 2024 லோக்சபா தேர்தலை ஒன்றாக சந்திக்காது. அதிமுக பாஜக இடையே 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி இருக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக புதிய கூட்டணி அமைக்கும். அதாவது புதிதாக கூட்டணி அமைக்கப்படும். இதற்கு விரைவில் பெயரும் வைக்கப்படும். இந்த புதிய கூட்டணி எப்படி இருக்கும் என்பதுதான் இப்போது கேள்வியே.

இந்த நிலையில் அதிமுக வட்டாரங்களில் புதிய கூட்டணி அறிவிக்கப்படும் என கூறியது முதல் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணி முறிவு பற்றி சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதனால் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க எடப்பாடி முயற்சி செய்யலாம். சீமானும் எடப்பாடியை பெரிதாக கடிந்து பேசியது இல்லை. இப்போதும் கூட சீமான் அதிமுக – பாஜக கூட்டணி உடைப்பை வரவேற்று உள்ளார்.

அதோடு திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் கூறி உள்ளார். ஆனால் சீமான் – எடப்பாடி ஒரு புரிதலுக்கு வந்து அதிமுகவுடன் ஒரு சில தொகுதிகளில் மட்டும் கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் கூட உள்ளனர். நாம் தமிழர் வாக்கு வங்கி 5% வரை இருக்கும் பட்சத்தில் அது அதிமுகவிற்கு பாஜக கொடுத்த அதே பலத்தை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் எடப்பாடியும் நாம் தமிழர் கட்சியை உள்ளே இழுக்கவே பெரும்பாலும் முயலுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Views: - 220

0

0