தேர்தலுக்கு 38 நாட்களே இருப்பதால் பரபரப்பில் அரசியல் கட்சிகள் : திமுக திருச்சி மாநாடு ரத்தாகுமா? திடீர் அறிவிப்பால் திகைப்பில் ஸ்டாலின்!!

26 February 2021, 7:10 pm
Dmk - stalin - updatenews360
Quick Share

சென்னை: ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 38 நாட்களே இருக்கும் நிலையில் சாவகாசமாக தேர்தல் பணிகளைத் திட்டமிட்டுவந்த தமிழக அரசியல் கட்சிகளை பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. குறிப்பாக, ஐ-பேக்கின் ஆலோசனைப்படி மிகவும் மந்தமாக தேர்தல் பணிகளைத் நடத்தி வந்த திமுக, மார்ச் 14-ஆம் தேதி நடத்தவுள்ள தேர்தல் மாநாடு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை, ஐ-பேக் ஆலோசனைப்படி நேரடிப் பிரச்சாரக் கூட்டங்களில் பேசாமல் கிராம சபைக் கூட்டங்களை நடத்திவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிரச்சாரத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன என்பதால் உடன்பிறப்புகளை தேர்தல் அறிவிப்பு பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழ்நாடு வந்திருந்தபோது அனைத்து கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்தனர். அப்போது, தமிழகத்துக்கு மே மாதத்துக்கு முன் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் மே 24 வரை இருக்கிறது. இதனால், ஏப்ரல் இறுதி வாரம் தேர்தல் நடத்தப்படும் என்றும் அல்லது மே இரண்டாவது நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் பிளஸ் 2-வுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. இது மே 3-ல் தொடங்கியதால் அதற்கு முன்பே தமிழகத்தில் தேர்தல் நடக்கும் என்று கணிக்கப்பட்டது. பெரும்பாலும் ஏப்ரல் கடைசி வாரம் தேர்தல் இருக்கும் என்று கூறப்பட்டது.

இதற்கேற்ப தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டுப் பிரச்சாரம் செயதுவந்தன. தமிழக முதல்வர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அதிரடியாக பிரச்சாரத்தை முடித்துவிட்டார். பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்கு குழுக் கடன் தள்ளுபடி, மெட்ரோ ரயிலுக்கு கட்டணம் குறைப்பு உள்ளிட்டட அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து முதல்வர் பிரச்சாரத்தில் இருப்பதால் அதிமுகவினர் தெம்பாக இருக்கின்றனர்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி முடிவாகிவிட்டது. மேலும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டபின் பாமகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது.

ஆனால், திமுகவில் ஐ-பேக்கின் ஆலோசனையின்படி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. திமுக, தலைவர் ஸ்டாலின் இதுவரை நேரடிப் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை. மக்கள் கிராம சபை என்ற பெயரில் சிறிய அளவில் கூட்டங்களை நடத்தி வருகிறார். திமுகவில், கூட்டணிப் பேச்சுகள் காங்கிரசுடன் தொடங்கியுள்ளது. இதிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. காங்கிரஸ் 50 தொகுதிகள் கேட்க திமுக 20 தொகுதிகள் தருவதாகச் சொல்வதால் இழுபறி நீடிக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, இரு கம்யூனிஸ்ட் காட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றுடன் இன்னும் பேச்சுகள் தொடங்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக மார்ச் 14 அன்று தேர்தல் மாநாடு நடத்துவதாக திமுக அறிவித்துள்ளது. ஆனால், மார்ச் 12-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.வேட்பு மனு தாக்கல் நேரத்தில் மாநாடு நடத்தப்படுமா என்ற என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இரண்டும் ஒரே நேரத்தில் திமுகவின் மோசமான திட்டமிடல் என்று கூறப்படுகிறது.
வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 13 நாட்களே இருக்கும் சூழலில், அதற்குள் கூட்டணிப் பேச்சுகளை முடிக்க வேண்டும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களின் எண்ணிக்கையை முடிவு செய்வதுடன் போட்டியிடும் தொகுதிகளையும் இறுதி செய்ய வேண்டும், போட்டியிடும் வேட்பாளர்களையும் முடிவு செய்ய வேண்டும்.

நேரடித் தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் 36 நாட்களே இருக்கின்றன. இந்த நிலையில் திருச்சியில் மாநாடும் நடத்த வேண்டும் என்ற நெருக்கடியில் திமுக சிக்கியுள்ளது. இதனால், திமுக கூட்டணியின் பிரச்சாரத்தில் பாதிப்பு ஏற்படுமா என்றும் இதனால் தேர்தல் முடிவுகள் பாதிக்குமா என்ற பரபரப்பு திமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது

Views: - 12

0

0