டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு : இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு!

18 January 2021, 7:10 pm
CM Meet Amitshah- Updatenews360
Quick Share

டெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் டெல்லி சென்றடைந்தார்.

டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் தலைமை செயலாளர் சண்முகம், முதலமைச்சரின் செயலாளர்கள் உட்பட அதிகாரிகள் சென்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, இன்று இரவு அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து நாளை காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நிதியுதவி குறித்து கோரிக்கை மனுவை அளிக்கிறார்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை விரைவில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிகளை எடுக்க முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்துகிறார், மேலும் வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கிறார்.

இதுமட்டுமின்றி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் முதலமைச்சர் பழனிசாமி, காவிரி நதியை சுத்தப்படுத்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பாக செயல்படுத்தி வரும் நடந்தால் வாழி என்ற காவிரி திட்டத்திற்கு நிதி உதவ கோருகிறார்.

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 0

0

0