எஸ்.பி.பி. உடல்நிலை நிலவரம் : நல்ல செய்தியை சொன்ன மருத்துவமனை நிர்வாகம்..!

24 August 2020, 7:00 pm
spb - updatenews360
Quick Share

கொரோனா பாதிப்பில் இருந்து பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையை குறித்து மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டுவர வேண்டும் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து நாள்தோறும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தது.

இந்த சூழலில், கொரோனா தொற்றில் இருந்து எஸ்.பி.பி. மீண்டு வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், இந்த தகவலை அவரது மகன் எஸ்.பி. சரண் மறுத்து வீடியோ வெளியிட்டார். மேலும், சமூக ஊடகங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம், வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்,” என தெரிவித்துள்ளனர்.