மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6,000ஆக உயர்வு : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
1 November 2021, 6:33 pm
CM stalin - boat - - updatenews360
Quick Share

மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.6,000ஆக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : சட்டப்பேரவை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி, ரூ.5,000ஆக வழங்கப்பட்டு வந்த மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை, நடப்பாண்டு முதல் ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.80 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ.108 நிவாரணத் தொகை வழங்கப்படும்.

முதற்கட்டமாக, 11 கடலோர மாவட்டங்களில் 1.24 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் தரப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 380

0

0