சென்னையில் விமான சேவை முழுவதுமாக ரத்து… இன்றிலிருந்து உள்நாட்டு விமானங்களும் கிடையாது!

26 March 2020, 8:59 am
Flight air india 01 updatenews360
Quick Share

உள்நாட்டு விமான சேவைகளும் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்ட 506 பயணிகள் விமானசேவைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, நாடு முழுவதும் விமான சேவைகளுக்கு கடந்த 22ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

இதனால், சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவை முற்றிலுமாக முடங்கியது. எனினும், மக்களின் நலன் கருதி, உள்நாட்டு விமானச்சேவைகள்  நேற்று வரை தொடர்ந்தன.

இந்நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து புறப்படும் 196 விமானங்கள் வருகை தரும் 196 விமானங்கள் என மொத்தம் 392 விமான சேவைகள் ரத்தாகி உள்ளன.

இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் இயக்கப்பட்டு வந்த 506 பயணிகள் விமானங்களும் முற்றிலுமாக ரத்தாகி உள்ளன. எனினும், சரக்கு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.