அதிமுக எதிரிகட்சியாக அல்ல… எதிர்கட்சியாக செயல்படும் : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி..!!

22 June 2021, 1:00 pm
minister vijayabaskar - updatenews360
Quick Share

சென்னை : அதிமுக எதிரிக்கட்சி போன்று இல்லாம்ல் எதிர்க்கட்சியாக செயல்படும் என்று முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்ததும் 16வது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில், அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் அவர் வெளியிட்டார். குறிப்பாக, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடப்படும், உழவர் சந்தைக்கு புத்துயிர், அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.

இதைத் தொடர்ந்து, சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

சட்டப்பேரவைக் கூட்டத்தின் 2வது நாள் கூட்டம் இன்று தொடங்கியதும், நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், ஆளுநர் உரை மீதான விவாத‌த்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் பேசியதாவது:- ஆளுநர் உரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை முக்கியமாக பார்க்கிறேன். அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும். பொதுபோக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும், என்று கூறினார்.

Views: - 109

0

0