‘விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை’ : இளைஞர்களுக்கு அப்துல்கலாம் விட்டுச் சென்ற வார்த்தைகள்..!!

27 July 2020, 11:59 am
apj-kalam - updatenews360
Quick Share

ஏவுகணை நாயகன் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மறக்க முடியாத, அழியா எண்ணங்களை விதைத்துச் சென்றவர் நம் தலைவர். மாணவர்கள் என்றால் அவ்வளவு பிரியம் கொண்ட அப்துல்கலாம், தனது கடைசி வினாடிகளையும் மாணவர்களின் மடிகளிலேயே விட்டுச் சென்றார்.

ஆம், வட இந்தியாவில் ஒரு கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது, மாரடைப்பு ஏற்பட்டு நம் அத்துனை பேரின் எண்ணங்களை இருளாக்கி விட்டு சென்று விட்டார். இன்று அப்துல்கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இவரது பிறந்தநாளான அக்டோபர் 15-ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. சொந்த மாவட்டமான ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் இவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

The President, Dr. A.P.J. Abdul Kalam while interacting with Indian Community children giving his autographs on the hand of one young student at India House in Yangon on March 8, 2006.

இந்த நினைவு நாளில் அவர் இளைஞர்களுக்கு விட்டுச் சென்ற எழுச்சி உரைகளை தற்போது சுருக்கமாக காண்போம்.

விஞ்ஞானம் சொன்னீர்…
விவசாயமும் சொன்னீர்…

அறிவியல் சொன்னீர்…
அறிவார்ந்த அரசியலும் சொன்னீர்..

உயிர்களிடத்தில்
அன்பு காட்ட சொன்னீர்… ஊரணிக்கு உயிர் கொடுக்கச் சொன்னீர்…

நல்ல நூல்களைப்
படிக்கச் சொன்னீர்…
நதி நீரை இணைக்கச் சொன்னீர்…

நேர்மையாக உழைக்க சொன்னீர்…
நேர்மையாகவே வெற்றி பெறச் சொன்னீர்…

அணுசக்தி சோதனை செய்தீர்…
அமைதியாக பல சாதனை செய்தீர்…

உறக்கத்தில் வருவதல்ல கனவு என்றீர்
நீவீர் கண்ட கனவுகள் எல்லாம் மெய்படும் ஐயா..

இனிவரும் காலம் இளைஞர்கள் காலம்…

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை

இலட்சியம் உணர்வோடு உழைத்து நிச்சயம் வெல்வோம்

நல்லோர் லட்சியம் வெல்வது நிச்சயம்

கலாம் அவர்களின் செயற்களங்கள் மற்றும் உறுதிமொழிகள்:

நான்கு செயற்களங்கள்:

 1. கடுமையாக உழைப்பதை வழக்கமாக்கிக்கொளல்
 2. கற்பனைத் திறனை வளர்த்துக் கொளல்
 3. ஆட்சியின் நுணுக்கங்களை அறிந்து கொளல்
 4. சமுதாயக் கடமைகளை செவ்வனே செய்தல்

உறுதிமொழி:

 1. எனது கல்வி அல்லது பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து அதில் சிறப்பானதொரு இடத்தை அடைவேன்.
 2. எழுதப் படிக்கத் தெரியாத பத்துப்பேருக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுப்பேன்.
 3. மதுபானத்திற்கும், சூதாட்டத்திற்கும் அடிமையாகியுள்ள ஐந்து பேரை அதிலிருந்து விடுவிப்பேன்.
 4. அல்லல்படும் எனது சகோதரர்களின் இன்னல்களைத் தீர்க்கத் தொடர்ந்து பாடுபடுவேன்.
 5. குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
 6. சாதி, மதம், மொழி அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் வேதங்களுக்கும் ஆதரவளிக்கமாட்டேன்.
 7. நேர்மையில் முன்னுதாரணமாக இருந்து ஊழலற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுவேன்.
 8. பெண்களை மதிப்பேன், பெண் கல்வியை ஆதரிப்பேன்
 9. உடல் ஊனமுற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாக இருந்து அவர்கள் நம்மைப் போல இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்படுத்த உழைப்பேன்.
 10. நாட்டின் வெற்றியையும், மக்களின் வெற்றியையும் நான் பெருமிதத்துடன் மகிழ்ந்து கொண்டாடுவேன்

இந்த உறுதிமொழிகளை ஏற்று இளைஞர்கள் தளராத உறுதியோடு வளமான, மகிழ்ச்சியான பாதுகாப்பான இந்தியாவுக்காக உழைக்கும் போது வளர்ந்த இந்தியா மலர்வது திண்ணம்…
-பாரத ரத்னா Dr.A.P.J.அப்துல்கலாமின் நினைவு தினத்திலும் அவரது வார்த்தைகளை நினைவு கூறுவோம்..!