ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிப்பு

1 March 2021, 11:29 am
GST_UpdateNews360
Quick Share

டெல்லி : ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஜிஎஸ்டி வரி கணக்கை செலுத்துபவர்களின் சிரமங்களை உணர்ந்து, அதனை செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 2019 மற்றும் 20ம் நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி ஆண்டு கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு கடந்தாண்டு டிசம்பர்‌ 31-ஆம்‌ தேதியுடன்‌ முடிவடைய இருந்த நிலையில்‌, 2021 பிப்ரவரி 28-ஆம்‌ தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2வது முறையாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Views: - 10

0

0