தொடரும் கனமழை… நிலச்சரிவு…! நீலகிரி மக்களை புரட்டி போடும் மழை…!

7 August 2020, 11:01 am
Cbe Heavy Rain - Updatenews360-Recovered
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மலை வாசஸ்தலமான நீலகிரியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழை காரணமாக அந்த மாவட்டமே பெருத்த சேதத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

கொட்டித்தீர்த்த கனமழையால், பல இடங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. கனமழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசி வருகிறது. சாலைகளின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

மின்கம்பங்களும் சாய்ந்துள்ளதால் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு துறையினரும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால், 200க்கும் மேற்பட்ட இடங்கள் அபாயம் மிக்க பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க 567 முகாம்கள் தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு கொரோனா தாக்கம் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ஆகையால் அங்கு ரெட் அலர்ட்  விடுக்கப்பட்டு உள்ளது. வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம், உதவி வேண்டுவோர் முகாம்களை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 48

0

0