ஐபேக் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி…! மொத்தமாக அதிர்ந்த ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்

4 August 2020, 10:12 am
Quick Share

சென்னை: ஐபேக் நிறுவன ஊழியர்களில் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பிரசாந்த் கிஷோர், ஸ்டாலின் இருவரும் ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போய் உள்ளனர்.

200 நாடுகளை இன்னமும் சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். வல்லரசு நாடான அமெரிக்காவையே காலி செய்து வருகிறது. மனிதர்கள் மீதான இந்த தாக்குதலால் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உலக நாடுகளின் விஞ்ஞானிகள் களம் இறங்கி உள்ளனர். 

Corona Cbe - Updatenews360

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. சாதாரண மக்கள் மட்டுமல்லாது பெரும் அரசியல் தலைவர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் ஓயவில்லை. முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை தாக்கி வருகிறது.

அதிமுக, திமுக என கட்சி பேதம் இல்லாமல் கொரோனா வலம் வந்தாலும் வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பது என்னவோ திமுகதான். அக்கட்சியின் எம்எல்ஏவான ஜெ. அன்பழகன் கொரோனாவால் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு ஒன்றிணைவோம் வா என்ற திட்டமே காரணம் என்று கூறப்பட்டது.

anbalagan - stalin - updatenews360

இந்த திட்டத்தின் மூலம் தனிமனித இடைவெளியின்றி மக்களை சந்தித்ததால் தொற்று பரவி அவர் உயிரிழந்தார் என்று ஒரு பேச்சு இன்றளவும் உள்ளது. இந்த களேபரம் எல்லாம் ஒரு பக்கம், திமுக தமது 2021ம் ஆண்டு தேர்தல் பணிகளில் படுசிரத்தையாக இறங்கி உள்ளது.

அவரது தேர்தல் கால வியூகங்களுக்காகவே வடநாட்டில் இருந்து இங்கே இறக்கிவிடப்பட்டவர் பிரசாந்த் கிஷோர். திமுக, பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த பணியில் ஐபேக் நிறுவனம் தமது ஊழியர்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளது.

Prashant_Kishore_UpdateNews360

அவர்களும், மக்களின் மனநிலை, அவர்களது கருத்துகள் பற்றி சர்வே எடுத்து அனுப்பி பணியாற்றி வருகின்றனர். மக்களோடு மக்களாக களப்பணியாற்றியதால் என்னவோ, அந்த நிறுவனத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

Stalin-06-updatenews360

அதன் எதிரொலியாக சென்னையில் உள்ள ஐபேக் நிறுவனம் மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தேர்தல் களப்பணிகளும் சுருங்கியுள்ளதால் ஸ்டாலினும், பிரசாந்த் கிஷோரும் ஷாக்காகி உள்ளனர். இந்த நிலைமை எப்போது சீரடைந்து, மீண்டும் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படும் என்ற கவலையில் இருவரும் உள்ளதாக அறிவாலய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Views: - 0 View

0

0