மக்கள் கிளர்ச்சியால் வீழ்கிறதா, கியூபா?அலறும் தமிழக கம்யூனிஸ்டுகள்!

Author: Udayachandran
1 August 2021, 2:01 pm
Modi Cuba Communist- Updatenews360
Quick Share

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள்.

அதுபோல எங்காவது கம்யூனிஸ்ட் ஆளும் ஒரு நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை, கடும் நெருக்கடி என்றால் அதற்கு, அமெரிக்காதான் காரணம் என்று கூறி ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக’ என்ற கோஷத்துடன் இந்தியாவிலுள்ள மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனடியாக போராட்ட களத்தில் குதித்து விடுவார்கள்.

Communist Party of India (Marxist) - Home | Facebook

தமிழகத்தில், அவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கை கோர்த்துக் கொள்வார்கள். திராவிடர் கழகம், மே 17 போன்ற அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கிவிடும்.

இப்படி அமெரிக்காவுக்கு எதிராக ஒரு போராட்டம், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்டது.

Why Feminists Must Join the Movement Against the Manusmriti

அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, “60 ஆண்டுகளாக கியூபா நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்திலும் கியூபாவுக்கு மருந்துகள் உணவுகள் வழங்கவும் தடை விதிக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டு பொருளாதார தடையை நீக்கும்படி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இந்தியாவின் நட்பு நாடான கியூபாவுக்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

மாணவனின் தந்தை படுகொலை.. மத்திய, மாநில அரசுகள்மீது பாலகிருஷ்ணன்  குற்றச்சாட்டு | erode cpi balakrishnan byte - Tamil Oneindia

சரி, தமிழக இடதுசாரி கட்சிகள் கூறுமளவிற்கு கியூபாவில் அப்படி என்னதான் நடக்கிறது?… அதற்கு முன்பாக கியூபாவின் வரலாறு பற்றி கொஞ்சம் சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

அமெரிக்காவுக்கு அருகே 150 கிலோ மீட்டர் தொலைவில் வடகரீபிய கடலில் அமைந்துள்ள தீவு நாடு கியூபா. 1 கோடியே 30 லட்சம் மக்கள் வசிக்கும் இந்தத் தீவு நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 100% பேர். சுகாதாரத்திலும் உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
கரும்பு உற்பத்தியில் சாதனை படைப்பதால் உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்ற சிறப்பு பெயரும் இதற்கு உண்டு. புகையிலை உற்பத்தியிலும் முன்னணி நாடு.1959 முதல் சோசலிச குடியரசு நாடாக திகழ்கிறது.

பெயருக்குத்தான் குடியரசு. ஆனால் நாட்டின் அதிபர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. கிட்டத்தட்ட சீனப் பாணிதான். அரசாங்கத்துக்கு எதிராக யாரும் பேசவோ, எழுதவோ முடியாது. அதாவது கருத்து சுதந்திரம் என்பது செய்தியாளர்களுக்கும் மக்களுக்கும் மருந்துக்கு கூட கிடையாது.

Fidel Castro | Biography, Cause of Death, Brother, & Facts | Britannica

1959-ல் புரட்சியில் ஈடுபட்ட பிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் அதிபர் ஆனார். 2008-ல் அவருடைய தம்பி ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சிப் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவரும் பதவி விலகிக்கொள்ள புதிய அதிபராக மிகல் டியாஸ் கனால் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்று மாதங்களாக பெரும் எதிர்ப்புமின்றி ஆட்சி ஓடிக்கொண்டிருந்தது. ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து நாட்டின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப்போனது.

நாட்டில் கடும் உணவுப் பஞ்சம், மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. உணவு கிடைக்காமல்  மக்கள் வீதிக்கு வந்து தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

ஜூலை 14-ம் தேதி சாண்டியாகோ நகரில் தொடங்கிய அரசுக்கு எதிரான கிளர்ச்சி தலைநகர் ஹவானா உள்ளிட்ட16 பெரிய நகரங்களுக்கும் பரவியது. இதுவரை அங்கு போராட்டம் ஓய்ந்ததாக தெரியவில்லை.

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் நாட்டில் பொதுவாக மக்கள் தெருவில் இறங்கி போராட மாட்டார்கள். ஏனென்றால் அது ஒரு சர்வாதிகார நாடாகவே இருக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது கியூபாவில் மக்களின் தன்னெழுச்சி போராட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுடன் கூடவே, உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதால், விலைவாசிகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. கடுமையான மின்வெட்டும் மக்களை அதிருப்தியின் உச்சத்திற்கு அழைத்து சென்றுள்ளது. உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும் தொடர் கதையாகி விட்டது.

Thousands in Cuba protest over Covid concerns, government frustrations

‘கம்யூனிசத்தால் வீழ்ந்தோம்’ “நாங்கள் உயிருக்கு அஞ்சவில்லை. எங்களுக்கு சர்வாதிகாரம் வேண்டாம். சுதந்திரம்தான் தேவை. உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு சுங்க வரிகள் ரத்து செய்யப்பட வேண்டும்” என மக்கள் கோஷமிடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
போராட்டக்காரர்கள் தாக்கப்படும் வீடியோ காட்சிகளையும் சமூக வலைத் தளங்களில் காணமுடிந்தது. இதனால் கியூபா அரசு உடனடியாக இணையதள வசதியை முடக்கி வைத்துவிட்டது.

போராட்டக்காரர்களை ஒடுக்க, பெரிய அளவில் அடக்குமுறையை அரசு கையாண்டு வரும் நிலையில், கியூபாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்தது. இதுபற்றி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறும்போது “கியூபாவில் கருத்துச் சுதந்திரம் இருக்கவேண்டும் என்பதை அமெரிக்கா ஆதரிக்கிறது, மக்கள் மீதான எந்தவொரு வன்முறையையும், அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் குறிவைத்தும் நடத்தப்படும் அதிகார துஷ்பிரயோகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று எச்சரித்தார்.

இதற்கிடையே நெருக்கடியை சமாளிக்க சர்வதேச எல்லைகளை கியூபா திறந்து விட்டுள்ளது
அங்கே யார் வேண்டுமானாலும் உணவு, மருந்து பொருட்களை கொண்டு வரலாம், அதற்கு வரியோ சோதனையோ கிடையாது என்றும் அறிவித்துள்ளது. ஒரு நாடு சோதனை நடத்தாமல் தனது எல்லைகளை திறந்து விடும் நிலை உள்ளது என்றால் தனது  ஆளுமையை அரசு இழந்து விட்டது என்றே அர்த்தம்.

1990களில் சோவியத் ரஷியா உடைந்ததை போல கியூபா தற்போது, மிகப்பெரிய சமூக, பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது.   

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை ஏற்பட்டபோது கியூபா சமாளித்து கொண்டது. ஆனால் இரண்டாம் அலையில் ஆட்டம் கண்டுள்ளது. நாள் ஒன்றுக்கு அங்கு 8 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று ஏற்படுகிறது. ஒரே நாளில் 75க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகிறார்கள். கொரோனாவை அரசு சரியாக கையாளவில்லை என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் சொல்லும் காரணம்.

மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கூறி போராடும் மக்களை கியூபா சொந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது என்று கூறி ஆறுதல்படுத்த முயற்சிக்கிறார் அந்நாட்டின் அதிபர். ஆனால் அது பலிக்கவில்லை.

தற்போது அமெரிக்காவில் பைடன் ஆட்சிக்கு அந்த பிறகு இந்த தடைகள் நீக்கப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும் தனது ஆட்சியின் முக்கிய கடமைகளில் ஒன்றாக அது இல்லை என்று பைடன் நிர்வாகம் கைவிரித்துவிட்டது.

Joe Biden: The President | The White House

தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டம் குறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “கியூபாவில் நடக்கும் போராட்டம், முழுக்க முழுக்க அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாகத்தான் நடக்கிறது என்பது போல இங்கே கம்யூனிஸ்டுகள் கதை கட்டுகிறார்கள்.

கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்காவின் கண்களில் விரலைவிட்டு ஆட்டுகிறது கியூபா என்று இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பெருமையுடன் கூறிவந்தன. எத்தனை தடைகள் போட்டாலும் அதை தாண்டிச் சென்று அமெரிக்காவின் முகத்தில் கரியைப் பூசுகிறது என்றும் வர்ணித்தார்கள். இத்தனை வருடங்கள் அமெரிக்காவை சமாளித்தவர்களால் இப்போது ஏன் முடியவில்லை? அப்படியென்றால் கியூபாவில் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றுதானே அர்த்தம்?…

TN: CPI(M), CITU Hold Road Blockades, Demo in Support of Protesting Farmers  | NewsClick

உண்மையிலேயே, இப்போது கியூபாவில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அங்குள்ள மக்கள் சர்வாதிகாரத்தை எதிர்த்து கொந்தளித்துப் போய் போராடுகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தமிழகத்தில் மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை இதைப்பற்றி எல்லாம் பேசாமல் அமெரிக்காதான் காரணம் என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள்.

1989-ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு எதிராக பெய்ஜிங் நகரில் உள்ள
தியானமென் சதுக்கத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைதி வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வருடம் ஜூன் 4-ந்தேதி அவர்களில் 3000 பேர் மீது ராணுவ டாங்கிகளை ஏற்றி, சீன அரசு இனப்படுகொலை செய்தது. உண்மையில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

1989 Tiananmen Square protests | Amnesty International UK

இதுபோன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்று முன்கூட்டியே உலகநாடுகள் சீனாவை எச்சரித்திருந்தன. அதை சீன சர்வாதிகார அரசு காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அமைதி வழியில் போராடிய மாணவர்களை, ஆட்சியை கவிழ்க்க சதி செய்தார்கள் என்று குற்றம்சாட்டி போர் டாங்கிகளை ஏற்றிக்கொன்று குவித்தது.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஈவு இரக்கமற்ற இந்த செயலை பெயரளவுக்கு கூட கண்டிக்கவில்லை. அதே போன்றதொரு சூழல்தான் தற்போது கியூபாவில் ஏற்பட்டுள்ளது. இதுபற்றியெல்லாம் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினர் வாய் திறந்து விரிவாக பேசுவதே இல்லை. அப்படிப்பட்டவர்கள் அமெரிக்காவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதுதான் வேடிக்கையாக உள்ளது.

அதில் சம்பந்தமே இன்றி இந்தியாவையும் கோர்த்து விடுகிறார்கள். தியானமென் சதுக்க இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டபோது, இந்திய அரசு அதில் தலையிடவேண்டும் என்று இங்குள்ள கம்யூனிஸ்டுகள் யாரும் வற்புறுத்தவில்லை. பிறகு எதற்காக சர்வாதிகார ஆட்சி நடைபெறும் கியூபா மீதான பொருளாதார தடையை நீக்க அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் இந்தியாவை கேட்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அதானே!…

Views: - 364

0

0