நீங்க டெல்லிக்கு போங்க… போகாம இருங்க… நாங்க டேம் கட்டியே ஆவோம் : அடம்பிடிக்கும் எடியூரப்பா..!!

6 July 2021, 10:32 am
Yeddyurappa- karnataka cm - updatenews360
Quick Share

பெங்களூரூ : காவிரி ஆற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டிருக்கும் மேகதாது அணை திட்டம் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடகா அரசு கைவிட வேண்டும் என்றும், அணை கட்டுவதற்கான பணிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இது தொடர்பான நடவடிக்கையை கர்நாடகா முன்னெடுக்கக் கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதினார். அதில், காவிரி ஆற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டிருக்கும் மேகதாது அணை திட்டத்தினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் பதில் கடிதம் எழுதினார். அதில், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இன்று மத்திய அமைச்சரை சந்தித்து மேகதாது அணை தொடர்பாக பேசுகிறார்.

இந்த நிலையில், இந்த நிலையில், மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக, எத்தனை தடைகள் வந்தாலும் அணை திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 140

0

0