கச்சத்தீவுக்கு கருணாநிதி செய்த துரோகம்… நாளை வெளியாகும் முக்கிய ஆவணம் : அண்ணாமலை அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2024, 1:54 pm
tiru
Quick Share

கச்சத்தீவுக்கு கருணாநிதி செய்த துரோகம்… நாளை வெளியாகும் முக்கிய ஆவணம் : அண்ணாமலை அறிவிப்பு!!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், நேரு அவர்கள் பிரதமராக இருந்தபோது file noting எழுதுகிறார்.

இந்த குட்டி தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப்போவதில்லை… வேறு ஒரு நாட்டிற்கு தர தயாராக இருக்கின்றேன்…. 10-05-1961 இல் நேரு அவர்கள் எழுதிய file noting இது. முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சுழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சனையை தள்ளி போட்டு கொண்டே சென்றார்கள்

இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி இன்று வெளிய்கி உள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கட்சியைவுக்கு செய்த துரோகம் குறித்து பேசுவோம்.

நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி. 1960 ல் இருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிரித்து கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்துவிட்டது. இன்று வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதல் பகுதி மூலம் காங்கிரஸ் எப்படி துரோகம் செய்துள்ளது என்பது தெரிய வருகிறது.

நாளை வெளியாகும் இரண்டாவது பகுதியில் கலைஞர் கருணாநிதி துரோகம் செய்தார் என்பது தெரியும். Article 6 ன் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என தெரிவிக்கிறது. ஆனால் தற்போது article 6 இல்லாத காரணத்தினால் மீனவர்கள் தற்போது பட்ச தீவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

நாளை மக்களின் பார்வைக்காக இரண்டு பகுதியாக வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைத்து ஆவணங்களையும் தருகிறோம். கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி தாரை வார்த்து கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது எனவே மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

இதற்கு நிரந்தர தீர்வு என்பது எல்லையை நம் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்…
கச்சத்தீவை தாண்டி நெடுந்தி இவரை நாம் சென்றோம்… ராமநாதசுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது…

இரண்டு வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல..‌ கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம்.

மூன்று ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டி எல்லாம் சுற்றி இருக்கிறேன்… ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 91

0

0