கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப். 28 ம் தேதி திறக்கப்படும்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு…

27 August 2020, 10:17 pm
Quick Share

சென்னை: கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட், மே, 5ல் மூடப்பட்டது. இதற்கு மாற்றாக, திருமழிசை, மாதவரம் ஆகிய இடங்களில் தற்காலிக கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும், கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என, வியாபாரிகள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது குறித்து, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். மார்க்கெட்டில் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18-ம் தேதி முதல் கோயம்பேடு சந்தை தானிய அங்காடி திறக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில், முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்படும் எனவும், கோயம்பேடு சந்தைக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Views: - 9

0

0