ஜெயக்குமார் கொலை வழக்கில் விசாரணை இழுபறி… வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு…!!!

Author: Babu Lakshmanan
23 May 2024, 12:07 pm
nellai-jayakumar-dhanasingh--updatenews360
Quick Share

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60), நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். கடந்த 4ம் தேதி தனது வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் இறப்பதற்கு முன்பாக எழுதப்பட்ட கடிதங்களும் வெளியாகின.

மேலும் படிக்க: மக்களின் பிரச்சனை உங்களுக்கு காமெடியா போச்சா..? . CM ஸ்டாலினுக்கு மட்டும் தானா..? ஆர்பி உதயகுமார் ஆவேசம்…!!!

இந்த சம்பவம் குறித்து 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயக்குமார் தனசிங்கின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்த நபர்கள், கடிதத்தில் குறிப்பிட்ட நபர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், சம்பவ இடங்களில் இருந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் தடயவியல் புலனாய்வு துறை நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 12 தனிப்படைகள் நடத்திய விசாரணையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காத நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 199

    0

    0