பண்றத பண்ணீட்டு, மன்னிப்பா..? வழக்கு எல்லாம் ரத்து செய்ய முடியாது… எஸ்வி சேகருக்கு உயர்நீதிமன்றம் குட்டு

Author: Babu Lakshmanan
31 August 2021, 2:01 pm
SV Sekar- updatenews360
Quick Share

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தரக்குறைவான பதிவை பகிர்ந்ததாக நடிகர் எஸ்வி சேகர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

சர்ச்சை பிரபலமான எஸ்வி சேகர் கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் விதமாக, முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார். அவரது அந்தப் பதிவிற்கு கடும் கண்டனம் எழுந்தது. மேலும், பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி தரக்குறைவான கருத்தை பதிவிட்ட எஸ்வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கில் இருந்து நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும், வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி எஸ்.வி. சேகர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சார்பில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, முகநூலில் வந்த பதிவை ஃபார்வேர்டு செய்து விட்டதாகவும், எந்த உள்நோக்கமும் இல்லை என எஸ்.வி. சேகர் தரப்பினர் தெரிவித்தனர்.

இதனைக் கேட்டுக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, படிக்காமல் ஃபார்வேர்டு செய்துவிட்டு சர்ச்சை கிளம்பியதும் மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா என்றும் கேள்வி எழுப்பினார். வேலும், வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Views: - 253

0

0