மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : திருப்பூர் மாணவன் முதலிடம்

16 November 2020, 10:58 am
Quick Share

சென்னை : மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இருப்பினும், மாணவர்கள் சேர்க்கையை நடத்தி மத்திய, மாநில அரசுகள் அனுமதியளித்துள்ளன. ஆனால், நவ.,16ம் தேதி திட்டமிட்டபடி மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். அதில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஸ்ரீஜன் முதலிடத்தையும், மோகன பிரியா 2வது இடத்தையும் பிடித்துள்ளார்.

Views: - 19

0

0