மேகதாது விவகாரம்.. பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்படுமா? அண்ணாமலை அளித்த விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2021, 1:10 pm
Annamalai IPS - Updatenews360
Quick Share

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்படுமா என்பது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலைவிளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் மேகதாது அணைக்கட்ட ஒரு செங்கல் கூட வைக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மேலும் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசை எதிர்த்து பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பிரதமர் மோடி நிச்சயம் சம்மதிக்க மாவட்டர் என்று கூறியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 5ஆம் தேதி திட்டமிட்டபடி தஞ்சையில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Views: - 327

0

0