இது என்னடா, ‘வாழ்த்துக்கள்’-க்கு வந்த சோதனை… தமிழை பிழையுடன் எழுதிய அமைச்சர் ; வைரலாகும் வீடியோ… விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!

Author: Babu Lakshmanan
7 October 2023, 4:11 pm
Quick Share

செங்கல்பட்டில் பள்ளி நிகழ்ச்சியில் வாழ்த்துக்களை பிழையுடன் எழுதிய அமைச்சரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார்.

பின்னர், அவர் டிஜிட்டல் வகுப்பறையை திறந்து வைக்கும் விதமாக, அங்கு பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் என எழுத முயன்றார். ஆனால், அவர் ‘வாழ்துகள்’ என பிழையுடன் எழுதினார்.

இதனை அங்கிருந்தவர்கள் சுட்டிக்காட்டினர். இதைத் தொடர்ந்து, தவறை உணர்ந்த அமைச்சர் அன்பரசன், அதனை அழித்து விட்டு மீண்டும் எழுதினார். அப்போது, வாழ்த்துக்கள் என்ற சொல்லில் மீண்டும் க்-ஐ விட்டுவிட்டு எழுத முயன்றார். பின்னர், அருகில் இருந்தவர்கள் தவறை சொன்னதால், அதனை அப்படியே சரிசெய்து எழுதிவிட்டு, ‘ஆள விடுங்கடா சாமி’ என்பதைப் போல அங்கிருந்து நன்றி சொல்லியடி கிளம்பினார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், எதிர்கட்சியினர் பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இந்தி மொழியை கடுமையாக எதிர்க்கும் திமுக, தமிழ் மொழிக்காக குரல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் அன்பரசன் தமிழை பிழையுடன் எழுதிய சம்பவம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Views: - 433

0

0