உதயநிதி நிகழ்ச்சிக்கு வந்த பெண்களுக்கு தரமற்ற சேலை.. பணம் வாங்கியும் சொதப்பிய திமுகவினர்.. அலுவலகங்களில் முடங்கி கிடக்கும் அவலம்!

Author: Babu Lakshmanan
10 February 2023, 4:43 pm
Quick Share

மதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக பெண்களுக்கு கொடுக்கப்பட்ட தரமற்ற சேலைகளை வாங்க மறுத்ததால் அலுவலகங்களிலே வீணாக கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகர் பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே கலைஞர் திடலில் நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 75,000 மகளிர்களுக்கு மகளிர் சுய உதவி குழு கடன் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 5ம் தேதி மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக மதுரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து மகளிர் குழுவினர் அழைத்துவரப்பட்டனர் முழுவதுமாக பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள இந்த கூட்டத்திற்காக கடந்த ஒரு மாதமாகவே அமைச்சர் மூர்த்தி பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்தார்.

இந்த நிலையில், கூட்டத்திற்கு வருகை தரும் பெண்களுக்காக பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஒரே மாதிரியான சேலைகளை அணிந்து விழாவிற்கு வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், பெண்களை அழைத்துவரும் போது அனைவருக்கும் ஒரே மாதிரியான சேலைகளை வழங்கியுள்ளனர். ஆனால், தரமற்ற சேலை என்பதால் இதனை ஏராளமான பெண்கள் வாங்கமறுத்த நிலையில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சேலைகளை வீணாக கிடக்கின்றது.

பொங்கல் பரிசு தொடங்கி அரசு திட்டங்களில் தான் தரமில்லை என்றாலும் கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு வழங்கும் சாலையில் கூட தரமில்லாததால் பெண்கள் அதனை புறக்கணித்த அவலமும் அரங்கேறியுள்ளது.

இந்த சேலைக்காக மகளிர் குழுவை சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர்களிடத்திலும் ரூபாய் 100 வசூல் செய்யப்பட்ட நிலையில், உசிலம்பட்டி பகுதியில் மட்டும் இவ்வளவு சேலைகள் தேங்கி கிடக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.

Views: - 331

0

0