தமிழகத்தில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை : சுகாதாரத்துறை செயலர் தகவல்..!!

20 June 2021, 8:16 am
radhakrishnan - updatenews360
Quick Share

சென்னை: தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புனேவில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்த 3 லட்சத்து 10 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், சென்னையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டுவரப்பட்டன. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த சில நாட்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

corona Cbe -Updatnews360

மேலும், 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பை மறைக்கவோ,மறுக்கவோ எண்ணம் இல்லை எனவும் அது சாத்தியமும் இல்லை என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை எனவும் படிக்க மற்றும் வேலைக்காக வெளிநாட்டுகளுக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.

மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாநில அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Views: - 144

0

0