தேசிய மருத்துவர்கள் தினம் : முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து…!!

Author: Babu Lakshmanan
1 July 2021, 11:55 am
doctors day wishes - updatenews360
Quick Share

மக்கள் நலனை காக்கும் மகத்தான பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்கள் நலம் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள்! இது மக்களின் அரசு; மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கும். நீங்கள் மக்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடருங்கள். இந்த அரசு உங்களைப் பாதுகாக்கும் முன்களவீரராகச் செயலாற்றும்; துணை நிற்கும்,” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் இதனுடன் வெளியிட்ட வாழ்த்து குறிப்பில், “மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியும் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் இந்திய மருத்துவர்கள் நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவம் போல் அல்லும் பகலும் அரும் பணியாற்றுகின்றனர் மருத்துவர்கள். நாம் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளில் தளகர்த்தர்களாக-சிப்பாய்ககளாக-முன்கள வீரர்களாக பணியாற்றி, நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த மருத்துவர்களுக்கு இந்த நன்னாளில் வாழ்த்தும், நன்றியும்!

தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வலிமைபெற இந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உங்களின் ஒத்துழைப்பு எதிர்நோக்குகிறேன். இது மக்களின் அரசு; மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களுக்கான அரசாகவும் என்றும் இருக்கும். நீங்கள் மக்களை காக்கும் மகத்தான பணியை தொடருங்கள்; இந்த அரசு உங்களை பாதுகாக்கும் முன்கள வீரராக செயலாற்றும். துணை நிற்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உயிர் காக்கும் உன்னத சேவையே வாழ்நாள் கடமையென செயல்படும் மருத்துவர்கள் பணி மகத்தானது. கடினமான பேரிடர் காலங்களிலும் தன்னலம் கருதாமல் மக்கள் நலன்காக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த ‘தேசிய மருத்துவர்’ தினத்தில் எனது வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

Views: - 346

0

0