நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… ஸ்டாலின் சபதம் : கேள்விகளால் துளைத்தெடுத்த பாஜக..!! ஆட்டம் கண்ட அனைத்துக்கட்சி கூட்டம்..!!

Author: Babu Lakshmanan
8 January 2022, 12:02 pm
stalin - vanathi srinivasan - updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் விஜயபாஸ்கர், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜி.கே.மணி, பாரதி ஜனதா கட்சி சார்பில் வானதி சீனிவாசன், புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தளி ராமசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி உள்ளிட்ட 13 கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :- திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போன ஆண்டு ஜுன் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். நம்‌ நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

நீட்‌ தேர்விலிருந்து இன்று விலக்கு அளிக்கும்‌ சட்ட முன்வடிவை கடந்தாண்டு செப்டம்பர்‌ 13ம்‌ சட்டப்பேரவையில்‌ ஒருமனதாக நிறைவேற்றினோம்‌. அதனை குடியரசுத்‌ தலைவர்‌ ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.
ஆனால்‌, ஆளுநர் அனுப்பாமல் வைத்துள்ளார். மாநில உரிமையும்‌, சட்டப்பேரவையின்‌ சட்டம்‌ இயற்றும்‌ அதிகாரமும்‌ கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது. மாணவர்களின் நலனை பாதுகாக்க அனைவரின்‌ இலக்கும்‌ நீட்‌ தேர்வுக்கு முற்றுப்‌ புள்ளி வைக்க வேண்டும். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்யும் வரைவு மசோதா மீது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும், எனக் கூறினார்.

இதனிடையே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து பாஜக சார்பில் பங்கேற்ற வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நீட் தேர்வால் இடஒதுக்கீட்டை விட அதிகமாக இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வால் எள் முனையளவுக்கு கூட மாணவர்களுக்கு பாதிப்பில்லை. ஆரம்ப கட்டத்தில் நீட் தேர்வினால் சில பிரச்னைகள் இருந்ததை மறுக்கவில்லை; மாணவர்கள் கஷ்டப்படுவதாக அவர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. பழங்குடியின மாணவர்கள் எந்த கோச்சிங்கிற்கோ அல்லது பயிற்சிக்கும் செல்லாமல் நீட் தேர்வில் வெற்றிபெற்று தங்களது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பேரவையில் நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்ட போது பாஜகவின் கருத்தை முழுமையாக கேட்கவில்லை. மத்திய அரசு, மாநிலங்கள் மீது நீட் தேர்வை திணித்திருப்பதாக தீர்மானத்தில் உள்ளது, எனக் கூறினார்.

Views: - 464

0

0