தேர்தல் வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியாது… வேல்முருகன் பேச்சால் ஆடிப்போன முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
15 January 2022, 5:32 pm
Quick Share

கடந்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் தனது செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக அரசின் சில நடவடிக்கைகளை வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்தான் திமுக தற்போது தடுமாறி வருகிறது. அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள், தங்களின் கேள்விகளால் முதலமைச்சர் ஸ்டாலினை திணறடித்துக் கொண்டு வருகின்றன.

நீட் தேர்வு ரத்து தொடர்பான மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திமுக அரசு அனுப்பி வைத்துள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலுவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயன்று வருகிறார்.

ஆனால், இதுவரை அது கைகூடவில்லை. மாறாக, நீட் தேர்வு ரத்து செய்யும் விவகாரத்தில் பாஜக முட்டுக்கட்டை போடுவதாக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கூறி வருகின்றன.

இந்த நிலையில், நீட் தேர்வை திமுக அரசால் ரத்து செய்ய முடியுமா..? என்ற கேள்விக்கு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பதில் அளித்துள்ளார். அவரது பதில் திமுகவினரிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, நீட்‌ விவகாரத்தில்‌ சட்டப்‌ போராட்டம்‌ நடத்துவது ஒருபுறமிருந்தாலும்‌. கடந்த காலங்களில்‌ மத்திய அரசு எதேச்சதிகாரபோக்குடன்‌ நடந்து கொண்டபோது அப்போதைய முதல்வர்‌ கருணாநிதி அவர்கள்‌ களத்தில்‌ இறங்கி போராடியதுபோல்‌ முதல்வர்‌ ஸ்டாலின்‌ அவர்களும்‌ போராட்டக்‌ களத்திற்கு வர வேண்டும்‌. ஜல்லிக்கட்டு இனி நடக்கவே நடக்காது என பீட்டா போன்ற அமைப்புகள்‌ கூறிவந்தன. ஆனால்‌ தமிழகத்தில்‌ புரட்சி ஏற்பட்டு தமிழகத்தில்‌ மீண்டும்‌
ஜல்லிக்கட்டு நடத்தும்‌ நிலை வந்துள்ளது. தமிழகம்‌ முழுவதும்‌ போராட்டங்கள்‌ வெடித்தது, கோவையில்‌, மதுரையில்‌, சென்னையில்‌ என எங்கு பார்த்தாலும்‌ லட்சக்கணக்கான இளைஞர்கள்‌, மக்கள்‌ களத்தில்‌ இறங்கினர்‌. அதற்கு அஞ்சி மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்‌கியது.

வேளாண்‌ சட்டத்திலும்‌ இதே போல்‌ தான்‌ நடந்தது. எனவே நீட்‌ விவகாரத்தில்‌ மாநில அரன்‌ தன்னால்‌ இயன்ற வரை அதற்கு சட்டமன்றத்தில்‌ தீர்மானமாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால்‌ ஆளுநர்‌ அதை குடியரசுத்‌ தலைவருக்கு அனுப்பாமல்‌ காலம்‌ தாழ்த்து வருகிறார்‌. மொத்தத்தில்‌ இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தையும்‌. தமிழ்நாட்டு சட்ட வரம்பு எல்லைகளுக்கும்‌ உட்பட்டு தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நீட்‌ விவகாரத்தில்‌ பாஜகவை தவிர தமிழகத்தில்‌ உள்ள அனைத்து கட்சிகளும்‌ ஒரணியில்‌ நிற்கின்றன. தொடர்ந்து இதே போன்று மத்திய அரசு இதில்‌ செவிசாய்க்காமல்‌ இருந்து வந்தால்‌, நாளை தமிழக அரசே போராட்டத்தில்‌ இறங்கலாம்‌, தமிழகமே ஸ்தம்பிக்கும்‌ நிலை ஏற்படலாம்‌.

எனவே போராட்டத்தின்‌ மூலமே அனைத்தையும்‌ நாம்‌ வென்றெடுக்க முடியும்‌. தமிழக மாறில அதஇிகாரத்திலிருந்த கல்வியை கைப்பற்றி தன்‌ அதிகாரத்திற்குள்‌ மத்திய அரசு வைத்துக்‌ கொண்டதால்‌, இந்த விவகாரத்தில்‌ மாநில அரசால்‌ எதுவும்‌ செய்ய முடியவில்லை. அஇகபட்சமாக மாநில அரசு நீட்‌ தேர்வை ரத்து செய்ய வேண்டும்‌ என சட்டம்‌ இயற்றலாம்‌. அவ்வளவுதான்‌, அதாவது தமிழ்நாடு சட்ட மன்றத்துற்கும்‌ தயிழ்நாடு அரசுக்கும்‌ உள்ள அதிகாரத்தை கொண்டு நீட்‌ வாக்குறுதியை தமிழக அரசால்‌ நிறைவேற்ற முடியாது. ஆனால்‌ ஒரு நம்பிக்கையால்‌ வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின்‌ இயங்கியலே தன்னம்பிக்கையின்‌ அடிப்படையிலானதுதான்‌. அந்த அடிப்படையில்‌ தான்‌ திமுக ரத்து ஆட்சிக்கு வந்தால்‌ நீட்‌ ரத்து செய்வோம்‌ என வாக்குறுதி கொடுத்தது, என தெரிவித்துள்ளது.

Views: - 116

0

0

Leave a Reply