குஷ்புவுக்கே கோவில் கட்டும் போது, எம்ஜிஆருக்கு கோவில் கட்டுவதில் என்ன தவறு : அமைச்சர் துரைமுருகன் பளீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2022, 10:32 pm
Durai - Updatenews360
Quick Share

பட்டியலின பெண் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தனிப்பட்ட முறையில் நான் அதை வரவேற்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான வீடு ஆணை, புதியதாக வீடு கட்டிக்கொள்ள விரும்பியவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்,வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,மேயர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் பங்கு தொகை செலுத்திய 30 பேருக்கும், புதிதாக வீடு கட்டிக் கொள்ள உள்ள 104 பேருக்கும் ஆணைகள் வழங்கினார்.

பின்னர் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கேமரா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ஹெல்மட் அணிவது மிகவும் அவசியமானது .100ல் 80 பேர் ஹெல்மெட் அணிவது இல்லை. பெரும்பாலானோர் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுகின்றனர்.

சென்னையில் வாகன ஓட்டிகள் அதிகளவில் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்மெட் அணியவேண்டும். ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் மேலும் பட்டியலின பெண் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவித்தால் தனிப்பட்ட முறையில் நான் அதை வரவேற்கிறேன் என்றார்.

மேலும் காட்பாடியில் எம்ஜிஆருக்கு அதிமுகவை சேர்ந்த ஒருவர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார். குஷ்புவுக்கு கோவில் கட்டும்போது எம்ஜிஆருக்கு கோவில் கட்டுவது பரவாயில்லை எனவும் திராவிட கொள்கைகளை உண்மையிலே கடைபிடிக்கும் கட்சியாக திமுக மட்டுமே உள்ளது என கூறினார்.

Views: - 405

0

0