‘இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு இலவச பயணம்’: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!!

Author: Rajesh
5 May 2022, 3:52 pm
Quick Share

சென்னை: தற்போது 3 வயது வரை குழந்தைகள் கட்டணம் இன்றி பயணிக்கும் நிலையில் 5 வயது வரை கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து வகை அரசுப்பேருந்துகளிலும் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. பள்ளி, வாகனங்களுக்கு முன், பின் புறங்களில் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்த ஏதுவாக சிறப்பு மோட்டார் வாகன விதிகள் உருவாக்கப்படும்.

தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். விழா நாட்களைத் தவிர இதர நாட்களில் இணைய வழி வாயிலாக இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

Views: - 996

0

0