ஓபிஎஸ்-க்கு அடிமேல் அடி…. மொத்தமும் கையை விட்டுப் போயாச்சு… சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு..!

Author: Babu Lakshmanan
11 January 2024, 11:25 am
Quick Share

அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதித்த இடைக்கால தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இதுபோன்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என பல்வேறு தீர்மானங்கள் இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என்று தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதோடு, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியதும் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அதிமுக கொடி மற்றும் கட்சி பெயரை ஓபிஎஸ் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

இதற்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்கப்பட்டது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தனி நீதிபதி விதித்த தடையை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். இது ஓபிஎஸ்-க்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது.

Views: - 232

0

0