ஒன் நேஷன்… ஒன் ரேஷன்…! ஓகே சொன்ன ஓபிஎஸ்…! பட்ஜெட்டில் அறிவிப்பு…!

14 February 2020, 11:56 am
tn secretariat- updatenews360
Quick Share

சென்னை: மத்திய அரசின் ஒரேநாடு, ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தப்பட போவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில், மானிய விலையில் வழங்கப்படும், உணவு பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். ஆரம்ப காலக்கட்டத்தில் உணவு வழங்கல் துறையானது, காகித வடிவில் ரேஷன் அட்டைகளை வழங்கியது.

பின்னர் 2017ம் ஆண்டு முதல், மத்திய அரசின், ஆதார் விபரங்களின் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டுகள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் ஒரே நபர், வேறு முகவரிகளில், கூடுதல் கார்டுகள் வாங்குவது கட்டுப்படுத்தப்பட்டது.

மத்திய அரசு ஜூன் முதல், நாடு முழுவதும், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அமல்படுத்துகிறது. அதன்மூலம், பிற மாநில கார்டுதாரர்கள், தமிழக ரேஷன் கடைகளிலும்; தமிழக கார்டுதாரர்கள், மற்ற மாநிலங்களிலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

இந் நிலையில் மத்திய அரசின் இந்த திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வரப்போவதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. சட்டசபையில் பட்ஜெட் தாக்கலில் இதை அறிவித்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த திட்டத்தை கண்டிப்பாக தமிழகத்தில் அமல்படுத்துவோம் என்று அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து, இனி வரக்கூடிய காலங்களில் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று தெரிகிறது.