7 பேர் விடுதலை பற்றி பொய்யை அள்ளி வீசும் திமுக … ஆளுநர் ‘நோ ரெஸ்பான்ஸ்’ : முதலமைச்சர் ஆவேசம்..!!

4 February 2021, 1:50 pm
Cm eps in assembly - updatenews360
Quick Share

சென்னை : பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநரிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டது. அப்போது, பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியதாவது :- பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து திமுகவினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். 7 பேரை விடுவிக்கக்கோரிய தீர்மானம் ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 7 பேரின் விடுதலை விவகாரத்தை பேரவையிலும், அமைச்சரவையிலும் கொண்டு வந்ததே அதிமுக அரசுதான்.

ஆனால், திமுக ஆட்சியின் போது நளினிக்கு மட்டும் கருணை மனுவை ஏற்று ஆயுள்தண்டனையாக குறைக்கவும், பிறரின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என முடிவு எடுத்தது. 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் இருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் வரவில்லை. விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கையும் உள்ளோம், எனக் கூறினார்.

Views: - 0

0

0