நாட்டின் வளர்ச்சியில் அழியாத தடங்களை விட்டுச் சென்றவர் பிரணாப் : பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

31 August 2020, 7:16 pm
pranap - modi - updatenews360
Quick Share

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூளையில் ஏற்பட்ட கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்த அவர், ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார். சுமார் இருவாரங்களுக்கு மேலாக உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அவர் இன்று காலமானார்.

இந்த நிலையில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மிகப்பெரும் தலைவரான பிரணாப் முகர்ஜியை, அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைவராலும் மதிக்கப்பட்டவர். நாட்டின் வளர்ச்சியில் அழியாத தடங்களை விட்டுச் சென்றவர். 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார்,” எனக் குறிப்பிட்டார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகவும வருத்தமளிக்கிறது. அவரது இழப்பு ஒரு சகாப்தத்தின் முடிவு. நமது நாடு தகுதியான மகன்களில் ஒருவரை இழந்து விட்டது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குடிமக்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

“சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டவர் பிரணாப் முகர்ஜி,” என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0