குஜராத்தில் சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் பலி: பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

19 January 2021, 11:19 am
Modi_NYPF_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: குஜராத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா என்ற இடத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடும்போது, லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கவும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

Views: - 7

0

0