பாமக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் : அதிரடி காட்டிய ஜிகே மணி..!!

Author: Babu Lakshmanan
30 August 2021, 11:22 am
GK Mani updatenews360
Quick Share

மதுரையைச் சேர்ந்த பாமக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மாரிச்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;- மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பாமக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மாரிச்செல்வம் என்பவர் பாமக கட்சியின் நற்பெயருக்குக்களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால், மாரிச்செல்வம் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 329

0

0