பெயரளவுக்கு மட்டும் தான் விலை குறைப்பு : திமுக விடியா அரசு பதில் சொல்ல வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2021, 2:40 pm
EPS Attack- Updatenews360
Quick Share

சென்னை : கலால் வரியை பெட்ரோலுக்கு ரூ.5 மற்றும் டீசலுக்கு ரூ.10 விலை குறைப்பு செய்த மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தின் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், ‘மக்கள் நலனுக்காக மத்திய அரசு தன் கலால் வரியை பெட்ரோலுக்கு ரூ 5 மற்றும் டீசலுக்கு ரூ10 விலை குறைப்பு செய்துள்ளதற்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன், பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு, பெயரளவில் பெட்ரோலுக்கு மட்டும் ரூ 3 விலை குறைப்பு செய்த திமுகவின் விடியா அரசே! தங்களின் தேர்தல் வாக்குறுதியில் இன்னும் மீதமுள்ள பெட்ரோலுக்கு ரூ 2 மற்றும் டீசலுக்கு ரூ 4 விலை குறைப்பை முழுமையாக நிறைவேற்றுவது எப்பொழுது?’ என பதிவிட்டுள்ளார்.

Views: - 323

0

0