கன்னியாகுமரியில் பிரியங்காவை களமிறக்கும் முனைப்பில் காங்.,: விருப்பமனு தாக்கல் செய்த கார்த்தி சிதம்பரம்..!!

5 March 2021, 5:49 pm
priyanka gandhi - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் எம்.பி. விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால், அவரது கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில், தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

congress priyanka gandhi

மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து கடந்த 1ம் தேதி முதல் விருப்பமனுக்கல் பெறப்பட்டு வருகின்றன.

விருப்ப மனுக்களை அளிக்க விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் ரூ.500 கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை இன்று வரை ரூ.25,000 கட்சி நன்கொடையாக வரைவோலை மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதற்கான விருப்பமனுவை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து, பிரியங்கா காந்தி இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் அவருடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0